நிறைமதி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள்
ADDED :4506 days ago
கள்ளக்குறிச்சி: நிறைமதி வரதராஜ பெருமாள்கோவில் கும்பாபிஷேக 3வது ஆண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்து மூன்றாவது ஆண்டு துவங்குவதையொட்டி சிறப்பு பூஜைகள்நேற்று முன் தினம் இரவு நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி, வரதராஜ பெருமாள் உற்சவர் மற்றும் மூலவர் விக்ரகங்களுக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. நாம சங்கீர்த்தன பஜனைகள் செய்தனர். கிராம மக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.