உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம்!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம்!

திருப்பதி: ஏழுமலையானை தரிசிக்க, நேற்று, 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. திருப்பதியில், பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் தர்ம தரிசன பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நேற்று காலை, "மார்னிங் வி.ஐ.பி., பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 300 ரூபாய் விரைவு தரிசனமும் காலை, 10:00 மணிக்கு மேல் ரத்து செய்யப்பட்டது. சனிக்கிழமை, 85 ஆயிரம் பக்தர்கள், ஏழுமலையானை தரிசித்தனர்.நேற்று, தர்ம தரிசனத்திற்கு, 20 மணி நேரமும், பாதயாத்திரை தரிசனத்துக்கு, ஏழு மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்துக்கு, ஐந்து மணி நேரமும் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !