திலகர் நகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :4582 days ago
புதுச்சேரி: திலகர் நகர், நவசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை 12ம் தேதி நடக்கிறது. திலகர் நகரில் நவசக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி நேற்று காலை 6.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, கஜபூஜை, லட்சுமி பூஜை, லட்சுமி ஹோமம், மாலை 5.00 மணிக்கு முதற்கால பூஜை நடந்தது. நாளை, 12ம் தேதி காலை 10.00 மணிக்கு, நவசக்தி மாரியம்மன், நவக்கிரகங்கள், கருவறை விமானம், ராஜகோபுரம் மற்றும் மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், திருப்பணிக்குழு மற்றும் பொதுக்குழுவினர் செய்துள்ளனர்.