திருப்பரங்குன்றம் கோயிலில் வருடாபிஷேகம்!
ADDED :4534 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடாபிஷேகம் நேற்று முன்திம் நடந்தது. கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த நட்சத்திரத்தை கணக்கிட்டு, அந்நாளை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் வருடாபிஷேகம் நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் காலை பூஜைகள் நடந்தன. மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு புணுகு காப்பும், கற்பக விநாயகர், துர்க்கை, சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு சாம்பிராணி தைல காப்பு சாத்துப்படியாகி பூஜைகள் நடந்தன. மாலையில் 2ம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து, புனிதநீரால் மூலவர் கரத்திலுள்ள வேல், சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகைக்கு அபிஷேகம் நடந்தது.