உள்ளூர் செய்திகள்

மூன்று மலை!

திருமால் வீற்றிருக்கும் ஏழுமலை(திருப்பதி), சிவன் இருக்கும் காளத்திமலை (காளஹஸ்தி), முருகன் அருளும் தணிகைமலை(திருத்தணி) ஆகிய மூன்றும் தமிழகத்தின் எல்லைத் தெய்வங்களாகும். திருப்பதியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் சனிக்கிழமை விரதம் மேற்கொண்டு குழந்தைகளுக்கு முடிக்காணிக்கை செலுத்துவர். காளஹஸ்தி பஞ்சபூத தலங்களில் வாயுதலமாக திகழ்கிறது. மதுரை சொக்கநாதரிடம் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதிட்ட நக்கீரர் இறுதிக்காலத்தை இங்கேயே கழித்தார். ஆறுபடைத்தலங்களில் திருத்தணி ஐந்தாவதாகும். . இங்கு முருகன், வள்ளிமணாளனாக வீற்றிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !