வால் இருந்தா அழகா இருக்கும்!
ADDED :4532 days ago
கிஷ்கிந்தையில் இருந்த பெண் வானரங்கள், ராவண வதத்திற்காக ஆண் குரங்குகளை போருக்கு அனுப்பி வைத்தன. வதம் முடிந்து புஷ்பக விமானத்தில் சீதையுடன் ராமர் அயோத்திக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சுக்ரீவன் ராமனிடம், விமானத்தை கிஷ்கிந்தையில் சிறிதுநேரம் இறக்குங்கள். சீதையை பெண் வானரங்கள் தரிசிக்கட்டும், என்றான். ராமரும் அப்படியே செய்ய, வானரங்கள் எல்லாம் ஓடி வந்தன. அப்போது ஒரு பெண்குரங்கு, சீதையைப் பார்த்து இவளைப் போய் அழகு என்று சொல்கிறீர்களே! இவளுக்கு நம்மைப் போல் வால் இல்லையே? என்றது. அவரவருக்கு அவரவர் உறுப்பு அழகு. குரங்குக்கு வால் அழகு. இந்தக் கருத்தைக் கேட்டு ராமரோ சீதையோ கோபப்படவில்லை. சிரித்து மகிழ்ந்தனர். இது ராமாயணம் தொடர்பான செவிவழிக்கதை.