ஏழுமலையான் பக்தர்களிடம் கேட்கும் கேள்வி!
ADDED :4537 days ago
திருப்பதி ஏழுமலையான், தம்மிடம் வரும் பக்தர்களிடம் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா? அவருடைய வலக்கரம் கீழ்நோக்கி இருக்கும். இதற்கு காரணம், கீழே சேவித்து விட்டு வந்தீர்களா? என்பது தான். கீழே என்றால் திருச்சானூர் பத்மாவதி கோயிலைக் குறிக்கும். தாயாரை தரிசித்தபின் தான் பெருமாளைத் தரிசிக்க செல்ல வேண்டும். தாயாரை முதலில் சேவிக்கச் செல்லும்போது, அவளே பெருமாளிடம் நமக்கு விரைந்து அருள்புரியும்படி சிபாரிசு செய்வதாக ஐதீகம். இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. முதலில் எனது திருவடியைத் தரிசனம் செய். பின் முகமண்டலத்தை பார் என்றும் குறிப்பிடுவதாகச் சொல்வார்கள்.