அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா துவக்கம்
ADDED :4532 days ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ரிஷிவந்தியத்தில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் பிரமோற்சவம் நடப்படுகிறது. இதற்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடந்தது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு பலிபீடம் அருகில் உள்ள மரத்தில் கொடியேற்றப்பட்டது. பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடந்தது. பூஜைகளை குருக்கள் நாகராஜ், சோமு செய்தனர். தினமும் இரவில் சுவாமி அலங்கரித்து திருவீதியுலா நடக்கிறது. வரும் 22ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். இதற்காக விரிவான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.