உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 30 கோடி ரூபாய் செலவில் பழநி பக்தர்கள் தங்கும் மண்டபங்கள்!

30 கோடி ரூபாய் செலவில் பழநி பக்தர்கள் தங்கும் மண்டபங்கள்!

பழநி: பழநி தேவஸ்தானம் சார்பில், பாதயாத்திரை பக்தர்களுக்காக, 30 கோடி ரூபாய் செலவில், பல்வேறு இடங்களில் காவடிமண்டபங்கள், இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி நடக்கிறது. முருகப்பெருமானின் மூன்றாம்படைவீடான பழநிக்கு தைப்பூசம், பங்குனிஉத்திரம், வைகாசிவிசாகத் திருவிழா நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் இளைப்பாறுவதற்காக,பழநி, காங்கேயம், நத்தம், தருமத்துபட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் காவடி மண்டபங்கள், நிழற்குடைகள், இளைப்பாறும் மண்டபம் மற்றும் நவீன கழிப்பறை வசதி,குடிநீர் வசதிகளுடன் தலா 90 லட்ச ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்," பழநி-திண்டுக்கல் ரோடு குழந்தைப்பர்
கோ யில், பழநிகோயில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்திமிடம், வின்ச் ஸ்டேஷன் எதிரே கோசாலை அருகே வாகனங்கள் நிறுத்துமிடம், 2 மாடிகளுடன் பக்தர்கள் தங்கும் மண்டபம், தலா 90 லட்ச ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. மொத்தம் 30 கோடி ரூபாய் செலவில், குடிநீர்வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகளுடன், பக்தர்கள் தங்கும்மடம், இளைப்பாறும் நிழற்கொடைகள், காவடி மண்டபங்கள் கட்டப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !