உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாண்டார்கோவிலில் 21ம் தேதி தீமிதி திருவிழா!

திருவாண்டார்கோவிலில் 21ம் தேதி தீமிதி திருவிழா!

திருபுவனை: திருவாண்டார்கோவில் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா வரும் 21ம் தேதி நடக்கிறது. இக் கோவிலில் திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. நாளை மறுநாள் காலை 9.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முக்கிய விழாவான தீமிதி திருவிழா வரும் 21ம் தேதி மாலை 6.00 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, காலை 7.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மதியம் 12.00 மணிக்கு படுகளம் காணுதல் நடக்கிறது. வரும் 22ம் தேதி மாலை 6.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, 23ம் தேதி 6.30 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !