உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றில் புதைந்திருந்த அம்மன் சிலை கண்டெடுப்பு

ஆற்றில் புதைந்திருந்த அம்மன் சிலை கண்டெடுப்பு

திருவண்ணாமலை: ஆற்றில் புதைந்திருந்த அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூர் கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள தென்பெண்ணை ஆறு வழியாக, சிலர் நேற்று முன்தினம் நடந்து சென்றுள்ளனர். அப்போது, கரையோரம் மணலில் புதைந்திருந்த அம்மன் கற்சிலை ஒன்று தெரிந்துள்ளது. கிராம மக்கள் ஒன்று திரண்டு மணலில் புதைந்திருந்த அம்மன் சிலையை தோண்டி எடுத்தனர். அச்சிலை கோவிலில் வைத்து வழிபாடு நடத்த திட்டமிட்டனர். மிகவும் பழமைவாய்ந்த சிலையை அரசிடம் ஒப்படைக்க, அப்பகுதியை சேர்ந்த சிலர் வலியுறுத்தியதை அடுத்து, தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு அம்மன் சிலையை கொண்டு சென்று தாசில்தார் ஜானகியிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !