உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகண்ட்டில் சிக்கிய பக்தர்கள் நலமுடன் திரும்ப சிறப்பு வழிபாடு

உத்தரகண்ட்டில் சிக்கிய பக்தர்கள் நலமுடன் திரும்ப சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி: உத்தரகண்ட் மாநிலத்தில் சிக்கியுள்ள பக்தர்களுக்காக நீலமங்கலம் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நேற்று அதிகாலை நடத்தப்பட்டது. உத்தரகண்ட் மாநிலத்திற்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் நலமுடன் திரும்ப நீலமங்கலம் சிவன் கோவிலில் நேற்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகர், காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர், சீதா லட்சுமண அனுமன் சமேத கோதண்டராமர், தண்டபாணி, கால பைரவர், நவக்கிரக தெய்வங்களுக்கு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !