செல்லியம்மன் கோவிலில் நாளை காப்பு கட்டு
ADDED :4520 days ago
தண்டலம்: தண்டலம் செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா வைபவம், நாளை காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. திருப்போரூர் அடுத்த தண்டலத்தில் பழமையான கிராம தேவதை கோவிலாக செல்லியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 15ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து விழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி நாளை, 3ம் தேதி, காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. வரும் 11, 12 தேதிகளில் தேர் வீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராம மக்களும் செய்து வருகின்றனர்.