உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலை புதுப்பிக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?

பெருமாள் கோவிலை புதுப்பிக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?

சின்னசேலம்: சின்னசேலம் அருகே கருங்குழியில் உள்ள பெருமாள் கோவிலை புதுப்பிக்க கூடுதல் நிதி ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்னசேலம் அருகே கருங்குழியில் உள்ள பெருமாள் கோவில் 150 ஆண்டுக்கு மேல் பழமையானது. கோவிலில் உள்ள சிலைகள் உடைந்து சேதமடைந்துள்ளன. கோவிலை சுற்றியுள்ள காம்பவுண்ட் சுவர் சேதமடைந்துள்ளது. அறநிலையத்துறையினர் ஆய்வு செய்து கோவிலை சீரமைக்க 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்தனர். கிராம மக்களிடம் வரிவசூல் செய்து கோவில் பணியை துவங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கோவிலை சீரமைக்க யாரும் நன்கொடை வழங்கவில்லை. பெருமாள் கோவிலை புதுப்பிக்க கூடுதல் நிதி ஒதுக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !