துலாம்: வருமானம் உயரும்!
மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லும் துலாம் ராசி அன்பர்களே!
இந்த மாதம் பிற்பகுதியில் அதிக நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.சூரியன் 10-ம் இடத்தில் நின்றும்,குரு9-ம் இடத்தில் நின்றும் நன்மை தருவார்கள். சுக்கிரன் ஜூலை18 க்கு பிறகு நன்மை தருவார். புதன் ஜூலை30 மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு வந்த பின்னர் நன்மைதர தொடங்குவார். 9-ல் உள்ள செவ்வாய், உங்கள் ராசியில் உள்ள சனி, ராகு,கேதுவால் பலன் இல்லை. சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. சூரியன் பலத்தால் எடுத்த புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். தடைகளை உடைத்தெறிவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். புதன் ஜூலை30 வரை 9ம் இடத்தில் நிலை கொண்டிருப்பதால், சிலரது பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். செவ்வாய் சாதகமற்ற நிலையில் இருப்பதால் உஷ்ணம் தொடர்பான உபாதைகள் வந்து, ஆகஸ்ட் 1 க்கு பிறகு குணமாகும். ஜூலை25, 26ல் மனக்குழப்பம் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு வெளியே எப்படி இருந்தாலும் வீட்டில் அந்தஸ்துடன் இருப்பீர்கள். ஜூலை29,30,31ல் பெண்களால் நன்மை கிடைக்கும். ஆகஸ்ட்6,7 தேதிகளில் உன்னதமான ஒரு நன்மை நடக்கும். தொழில், வியாபாரத்தில் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். மாத பிற்பகுதியில் நல்ல வளர்ச்சி காணலாம். தீயோர் சேர்க்கையால் அவதிபட்டவர்கள் விடுபடுவர். ஜூலை17, ஆகஸ்ட் 13,14ல் நல்ல வருமானத்தை காணலாம். ஜூலை19,20, ஆகஸ்ட் 10, 11,12ல் சந்திரனால் தடைகள் வரலாம். கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பண வரவு இருக்கும். குரு சாதகமான நிலையில் இருப்பதால் மாணவர்களின் முயற்சி வீண்போகாது. விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். ஆகஸட் 11,12 சிறப்பான நாட்களாக இருக்கும். ஜூலை21,22ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரும்.
நல்ல நாட்கள்:ஜூலை17,21,22,27,28,29,30,31,ஆகஸ்ட் 6,7,8,9,13,14
கவனநாட்கள்: ஆகஸ்ட் 1,2 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண் : 3,9 நிறம்:செந்தூரம், மஞ்சள்
வழிபாடு: ராகு கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுங்கள். சனிக்கிழமை சனிபகவானை வழிபடுங்கள்.