உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பம்: நகை வாங்கலாம்!

கும்பம்: நகை வாங்கலாம்!

உயர்ந்த சிந்தனையோடு செயல்படும் கும்ப ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 2 ல் உள்ள கேது, 4ல் இருக்கும் குரு, 5 ல் உள்ளசூரியன் ஆகியோரால் நன்மை உண்டாகும். புதன் ஜூலை 30க்குப் பிறகு மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறி நன்மை தரத் தொடங்குவார். மற்றபடி 9-ல் உள்ள சனி,ராகு, 4-ல் உள்ள செவ்வாயால் நன்மை கிடைக்காது. பணப்புழக்கம் இருக்கும். செல்வாக்கு கவுரவத்தை சூரியன் வழங்குவார். செவ்வாயால் நோய்நொடி வந்தாலும் பாதிப்பு ஏற்படாது. ஜூலை17, ஆகஸ்ட் 13,14 தேதிகளில் வயிறு பிரச்சினை வரலாம்.குடும்பத்தில் வசதி பெருகும். ஜூலை 30க்குப் பிறகு சுப நிகழ்ச்சிகள் கைகூடும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஜூலை 29,30,31 தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பணியாளர்களுக்கு மாதபிற்பகுதியில் பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும். ஜூலை18,19,20 ஆகஸ்ட் 15,16 தேதிகளில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். தொழிலதிபர், வியாபாரிகளுக்கு புதிய தொழில் தொடங்க வாய்ப்புண்டு. பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். ஜூலை25,26 தேதிகளில் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு முன்னேற்றமான பலன் கிடைக்கும். ஜூலை18க்குப் பிறகு பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம். ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் தொடர்ந்து நற்பலனை காணலாம். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்களுக்கு குருவால் கல்விவளர்ச்சி உண்டாகும். விரும்பிய பாடம் கிடைக்கவும் யோகமுண்டு. விவசாயிகளுக்கு பயறு வகை, நெல், கேழ்வரகு, கரும்பு, பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருப்பது கூடாது.பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். நகை வாங்குவர். ஆகஸ்ட் 6,7 தேதிகளில் சிறப்பான பலன் கிடைக்கும்.

நல்ல நாட்கள்: ஜூலை18, 19,20, 21,22, 25,26, 29,30,31, ஆகஸ்ட்6, 7,8,9,15,16
கவன நாட்கள்: ஆகஸ்ட் 10,11,12 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்:1,9    நிறம்: மஞ்சள்,செந்தூரம்
வழிபாடு: துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். நன்மை கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !