திட்டக்குடி மகா கும்பாபிஷேக விழா
ADDED :4517 days ago
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலத்தில் விநாயகர், செல்லியம்மன், பிடாரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 9ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 10ம் தேதி காலை விநாயகர், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்து, காலை 9:00 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நடந்து 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார், வேத விற்பன்னர்கள் குழுவினர் கும்பாபிஷேகத்தினை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.