ரமலான் நோன்பு துவங்கியது மசூதிகளில் சிறப்பு தொழுகை
ADDED :4469 days ago
மங்கலம்பேட்டை: முஸ்லிம்களின் புனித ரமலான் நோன்பு நேற்று முதல் துவங்கியதையடுத்து, பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடந்தது. முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமலான் நோன்பு காலம் நேற்று முதல் துவங்கியது. அதைத் தொடர்ந்து பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடந்தது.அதன்படி, மங்கலம்பேட்டை கீழவீதி ஜாமிஆ பள்ளி வாசல், மேலவீதி மஸ்திஜே நூர் பள்ளி வாசல், மில்லத் நகர் மஸ்திஜே ரஹ்மத் பள்ளி வாசல்களில் நேற்று இரவு சிறப்புத் தொழுகைகள் நடந்தன.