கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை!
ADDED :4516 days ago
திண்டுக்கல்: கோயில்களில் சுவாமி தரிசனத்திற்காக தனி கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும், என இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: ஆடியில் மாரியம்மன் கோயில்களில் வழிபாடு நடத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்படும். இதற்கான அரிசியையும் அரசு, இலவசமாக வழங்கவேண்டும். கோயில்களில் சுவாமி தரிசனத்திற்காக தனி கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஜூலை 21 ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். கோயில்களில் நடைபெறும் ஊழல்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறையினர்தான் காரணம் என, ராமகோபாலன் தெரிவித்தார்.