நவகிரக தோஷங்கள் நீங்க!
ADDED :4570 days ago
சென்னையிலிருந்து தாம்பரம் படப்பை வழியாக வாலாஜாபாத் செல்லும் வழியில் கட்டவாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிஸ்வரூப லட்சுமி நரசிம்மர் திருத்தலம் நவகிரக பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இப்பெருமாளின் திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் என நவகிரகங்களும் ஐக்கியமாகி இருப்பதால், இதை நவகிரக பரிகார ஸ்தலம் என்கிறார்கள்.