விவேகானந்தர் ரத ஊர்வலம்
ADDED :4526 days ago
எழுமலை:எழுமலையில் சுவாமி விவேகானந்தர் 150 வது ஜெயந்தி ரத ஊர்வலம் நடந்தது.விவேகானந்தா நடுநிலைப் பள்ளித் தாளாளர் சிவநேசன், தலைமையாசிரியை சீதாலட்சுமி, கட்டட தொழிலாளர் சங்கத் தலைவர் பெருமாள், பாரதியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் பொன்.கருணாநிதி, சேடப்பட்டி ஒன்றிய பா.ஜ., தலைவர் மாத்தூரான், மாவட்ட பா.ஜ., பொதுச் செயலாளர் சாந்தகுமார் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பொட்டல் காளியம்மன் கோயிலில், ரதத்தை வரவேற்றனர். பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளுடன் முக்கிய வீதிகளில் ரத ஊர்வலம் நடந்தது.