உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழைக்காக வழிபாடு

மழைக்காக வழிபாடு

பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை, மேலூர் பகுதியில் எட்டி பார்க்கவில்லை. கடந்த ஆண்டும் சரியாக மழை பெய்யாததால், இப்பகுதியில் விவசாயம் பாதித்தது. இதனால், கீழையூர் பகுதியில், பங்குனி திருவிழாநடக்க வில்லை. இந்த ஆண்டு மழை பெய்ய வேண்டி, ஆக, 9 காலை கீழையூர், மேலப்பட்டி, ரங்கசாமிபுரம், பட்டிஅடைக்கன்பட்டி, நா.கோவில்பட்டி, காந்தி நகர் மக்கள் சேர்ந்து, கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தினர். பொங்கல் வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !