உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மனுக்குபால் அபிஷேகம்

அம்மனுக்குபால் அபிஷேகம்

மேட்டுப்பாளையம்: ஆடி வெள்ளியை முன்னிட்டு, குரும்பனூர் மகாமாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இங்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு, பக்தர்கள் பால் குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது; மாலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஊர் பொது மக்கள், சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஓம் சக்தி பக்தர்கள் குழுவினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !