ஆடிப்பூர பால்குட விழா
ADDED :4537 days ago
பொன்னேரி:ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அம்மன் கோவிலில் பால்குட அபிஷேக விழா நடந்தது.
பொன்னேரி, அங்கமுத்து தெருவில் பிடாரி எட்டியம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ஆடிப்பூர விழாவினை முன்னிட்டு, 108 பால்குட அபிஷேக விழா, வெகு விமரிசையாக நடந்தது. பெண்கள் பால் குடங்களை தலையில் சுமந்தபடி, பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலிருந்து, எட்டியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அவர்கள் கொண்டு வந்த பால் குடங்களால் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும், பெண்கள் பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் சிவானந்தம் மற்றும் பகுதி மக்கள் மேற்கொண்டனர். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.