உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேசம்மன் கோவிலில் பாலாபிஷேகம்

தேசம்மன் கோவிலில் பாலாபிஷேகம்

நகரி:நகரி, தேசம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பாலாபிஷேகம் நடந்தது.
சித்தூர் மாவட்டம், நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகை கிராமத்தில் உள்ள தேசம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு,மூலவர் தேசம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, பக்தர்களால் உற்சவருக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.இதற்காக கோவில் சன்னிதியில் யாகம் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். மேலும் திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் சேர்மன் தயாநிதி, துணை நிர்வாக அதிகாரி வீரபத்திரா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !