சிம்மம்: பதவி உயர்வு!
சூரியனை ஆட்சிநாயகனாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
ராசிநாயகனான சூரியன் சிம்மத்தில் இருக்கும் காலமே ஆவணி. பொதுவாக சூரியன் ஒருவரது ராசியில் இருக்கும்போது அலைச்சலும் சோர்வும் உண்டாகும். செல்வாக்கு பாதிக்கப்படும். உடல் உபாதைகள் தென்படும் என்பது பொது விதி. ஆனாலும், அவர் சிம்மராசி நாயகன் என்பதால் எந்த பின்னடைவையும் தர மாட்டார். பூமிகாரகனாகிய செவ்வாய் 12-ம் இடத்துக்கு வருகிறார். அதனால் பித்தம், மயக்க உபாதைகள் உண்டாகும். பொருள் விரயம் ஏற்படும். அதேபேரம் செவ்வாயின் 4, 7-ம் இடத்துப் பார்வைகளால் நன்மை கிடைக்கும். சுக்கிரன் இந்த மாதம் சிறப்பாக பலனை தருவார். செப்.8 வரை அவர் 2-ம் இடத்தில் நின்று பொருளாதார வளத்தை கொடுப்பார். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். செப்.8க்குப் பிறகு அவர் 3-ம் இடமான அவரது சொந்த வீட்டில் இருந்து அதிக பலம் பெறுவதால் கூடுதல் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதன் செப்.3க்குப் பிறகு இடம் மாறி 2-ம் இடத்திற்கு செல்கிறார். அப்போது அவரால் அவப்பெயர் வரலாம். செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் கவலை உருவாகலாம். ஆனால் அவரின் பார்வையால் முயற்சி செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு ஆடை, அணிகலன் சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். குரு, சனி, ராகுவால் நன்மை உண்டாகும். வருமானம் சீராகும். சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால் கலைஞர்களுக்கு புகழ் கிடைக்கும். மாணவர்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டு படிக்க வேண்டியிருக்கும். குரு பக்க பலமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் உண்டு.
நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 19,20,21,22,28,29,30,31, செப்.1,4,5,6,9,10,15,16
கவன நாட்கள்: ஆகஸ்ட் 23, 24,25
அதிர்ஷ்ட எண்கள்: 4,6 நிறம்: சிவப்பு, வெள்ளை
வழிபாடு: பைரவரை வணங்குங்கள். காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். மூதாட்டிகளுக்கு உதவுங்கள்.