உள்ளூர் செய்திகள்

ஆடி திருவிழா

பவானி: பவானி சீதபாளையம், பவானி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள ஸ்ரீபெரியாண்டவர், ஸ்ரீபெரியாண்டிச்சி மற்றும் பேச்சியம்மன், சடைச்சியம்மன், சீரங்காயம்ன் போன்ற சுவாமிகளுக்கான ஆடித்திருவிழா நடந்தது. காலை, ஏழு மணிக்கு சின்னமோளபாளையம் மடப்பள்ளியில் இருந்து புறப்பட்டு சீதபாளையம் கோவிலுக்கு வருகை புரிந்தார். பின், அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, சின்னமோளபாளையம் ஆற்றுக்கு சென்று தீர்த்தம், கரகம் போன்றவைகள் பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மதியம், 12 மணிக்கு பெரும் பூஜை நடத்தி, அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !