உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேசக்­கா­ரி­யம்மன் கோவிலில் கூழ்­வார்த்தல் வண்டி ஊர்­வலம்

தேசக்­கா­ரி­யம்மன் கோவிலில் கூழ்­வார்த்தல் வண்டி ஊர்­வலம்

சென்னை: திரு­வொற்­றியூர் சாத்­துமா நகரில் ஆடி­மாத விழாவில் தேசக்­கா­ரி­யம்­ம­னுக்கு படைக்கும் கூழ்­வார்த்தல் வண்டி ஊர்­வலம் நடை­பெற்­றது. திரு­வொற்­றி­யூரில் சாத்­துமா நகர் என்ற பழ­மை­யான கிரா­மத்தில் எல்லை தெய்­வ­மாக கரு­தப்­படும் தேசக்­கா­ரி­யம்மன் கோவில் உள்­ளது. அங்கு ஆடி­மாதம் ஐந்­தா­வது வாரத்தில் கூழ்­வார்த்தல் விழா சிறப்­பாக நடக்­கி­றது. நேற்று காலை காப்­பு­கட்­டிய பக்­தர்கள், கங்கை திரட்டும் நிகழ்ச்­சி யில் கலந்து கொண்­டனர். பக்­தர்கள் சுமர்ந்து வந்த கங்கை தண்­ணீரை கொண்டு, தேசக்­கா­ரி­யம்­ம­னுக்கு அபி­ஷே­கமும், ஆரா­த­னையும் நடந்­தன. மஞ்­சளை கொண்டு சிறிய அளவில் அம்­மனை வடி­வ­மைத்து, சாமி­யா­டியின் தலையில் மலர்­களால் அலங்­க­ரித்த கர­கத்தில் மஞ்சள் அம்­மனை சுமந்­த­படி, சாத்­துமா நகர் வீதியில் பாரம்­ப­ரிய மேள­தா­ளங்­க­ளுடன் ஊர்­வலம் துவங்­கி­யது. உடன், மாட்டு வண்­டியில் வைக்­கப்­பட்ட பெரிய டிரம்மில், அம்­ம­னுக்­கென வீடு­களில் தயா­ரிக்­கப்­பட்ட கூழை, மக்கள் ஊற்­றினர். இதேபோல், ஒவ்­வொரு தெரு வழி­யா­கவும் செல்லும் கர­கத்­திற்கு பின், கூழ்­வார்த்தல் வண்டி சென்­றது. இறு­தியில் பக்­தர்கள் அளித்த கூழ், தேசக்­கா­ரி­யம்­ம­னுக்கு படைக்­கப்­பட்டு, பக்­தர்­க­ளுக்கு வினி­யோ­கித்­தனர். நேற்று மாலையில் டி.எச்., சாலையில் உள்ள தண்­டு­மா­ரி­யம்மன் கோவிலில், கறி,மீன் உண­வுடன் படையல் படைக்­கப்­பட்­டது. படையல் முடிந்­ததும், தேசக்­கா­ரி­யம்மன் வீதி­யுலா நடந்­தது. இந்த விழாவை ஒட்டி, திருத்­தணி தெருக்­கூத்து நாடகக் குழுவின் தெருக்­கூத்து நடந்­தது. விடிய விடிய நடந்த தெருக்­கூத்தில் புரா­ணக்­க­தைகள் பாடல்கள் வாயி­லாக சொல்­லப்­பட்­டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !