உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலி­யம்மன் கோவில் தீ மிதி திரு­விழா

பாலி­யம்மன் கோவில் தீ மிதி திரு­விழா

செங்­குன்றம்: வேண்­டு­தலை நிறை­வேற்றும் வகையில், பாலி­யம்மன் கோவிலில் பக்­தர்கள் நேற்று தீ மிதித்­தனர். சென்னை வில்­லி­வாக்கம் ஸ்ரீதேவி பாலி­யம்மன் கோவிலில் ஆடி திரு­வி­ழாவை ஒட்டி தீ மிதி விழா நேற்று மாலை நடந்­தது. கடந்த 16ம் தேதி காப்பு கட்­டிய பக்­தர்கள், விர­த­மி­ருந்து நேற்று மாலை பூக்­கு­ழியில் இறங்கி தீ மிதித்­தனர். தீ மிதி உற்­ச­வத்­திற்­காக பொது­மக்கள் அம்­மனை வணங்கி, விற­கு­களை பூக்­கு­ழியில் வைத்­தனர். நேற்று முன்­தினம் அக்னி சட்டி உற்­சவம் நடந்­தது. 950 பக்­தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து நீராடி, நேற்று மாலை தீ மிதித்­தனர். அதன்பின் அம்மன் திரு­வீதி உலா நடந்­தது. வில்­லி­வாக்கம் சுற்­று­வட்­டார பகு­தி­களில் இருந்து ஏரா­ள­மானோர் விழாவில் கலந்து கொண்­டனர். செங்­குன்றம் லட்­சுமி அம்மன் கோவி­லிலும் நேற்று மாலை தீ மிதி திரு­விழா நடந்­தது. அதில் 500 பேர் தீ மிதித்து வேண்­டு­தலை நிறை­வேற்­றினர். பக்­தர்­களின் பாது­காப்பு பணியில், அந்­தந்த பகுதி போலீசார் ஈடு­பட்­டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !