ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் 1008 வெள்ளி கலச பூஜை
ADDED :4500 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், உலக நன்மைக்காகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வேண்டி, 1008 வெள்ளி கலசங்களில் சிவலிங்கம் போல் வடிவமைத்து, சிறப்பு பூஜை நடந்தது. ஹரித்துவார், உஜ்ஜைனி, காசி, பூரி ஜெகநாதர் உள்ளிட்ட ஆறு முக்கிய தலங்களில் இருந்து வந்த, 21 வேதவிற்பன்னர்கள் பூஜை நடத்தினர்.