காட்பாடியில் தயாராகும் விநாயகர் சிலைகள்
ADDED :4459 days ago
வேலூர்: காட்பாடியில், ராஜஸ்தான் கலைஞர்கள் சாலை ஓரத்தில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் செய்கின்றனர். ராஜஸ்தான் மாநிலம் குஜவராயுடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மேத்தா, யஸ்வந்த் சிங்கா என, 25க்கும் மேற்பட்ட பொம்பை செய்யும் கலைஞர்கள் வேலூர் அடுத்த காட்பாடியில் சாலை ஓரங்களில் விநாயகர் சிலைகளை செய்து வருகின்றனர். இவர்கள், 5 அடி முதல், 25 அடி உயர அளவு விநாயகர் சிலைகள் செய்கின்றனர். ஒரு சதி, 2 ஆயிரம் ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இந்தாண்டு, 2, 500 விநாயகர் சிலைகள் செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினர்.