உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி கிருஷ்ண ஜெயந்தி

சிங்கம்புணரி கிருஷ்ண ஜெயந்தி

சிங்கம்புணரி மணப்பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. யாதவ பேரவை தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார்.செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார்.பொருளாளர் அம்பலத்தரசு வரவேற்றார். கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை ஆராதனை நடந்தது.போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கோவிந்தானந்தசாமி,முன்னாள் ஒன்றிய தலைவர் பெருமாள்,ராமநாதன், மகளிர் அணி தலைவி பார்வதி,செயலாளர் கிருஷ்ணவேணி பங்கேற்றனர். திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் வட்டார யாதவர் உறவின்முறை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. மாலையில் உறியடியுடன் விழா துவங்கியது.தொடர்ந்து பக்தர்களின் பரத நாட்டியம், கோலாட்ட நிகழ்ச்சி நடந்தது.குழந்தை கண்ணனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைக்குப் பின்னர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரைக்குடி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக்., மேல்நிலை பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகள், கிருஷ்ணர், ராதை வேடம் ஏற்று வந்திருந்தனர். பள்ளி செயலாளர் கார்த்திக் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !