மதுரை மீனாட்சி.. ஆடி வீதியில் பக்தர்களுக்கு அனுமதி?
ADDED :4420 days ago
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களை, ஆடிவீதியில் அனுமதிக்க, கோயில் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலில், பிற்பகல் 12.30 மணி முதல், மாலை 4 மணி வரை, நடை அடைக்கப்படும். அந்த நேரத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக, ஆடி வீதியில், பக்தர்களை அனுமதிப்பதில்லை. இதனால், வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள், சித்திரை வீதிகளில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதை கருத்தில் கொண்டு, "மதியம் 2 மணி முதல், மாலை 4 மணி வரை, பக்தர்களை ஆடிவீதியில் அனுமதிக்கலாம் என, போலீசாருக்கு, கோயில் நிர்வாகம் பரிந்துரைத்து உள்ளது. போலீசார் பரிசீலித்து வருகின்றனர்.