உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பை வைத்தியநாத பாகவதருக்கு இசையால் கே.ஜே.ஜேசுதாஸ் அஞ்சலி!

செம்பை வைத்தியநாத பாகவதருக்கு இசையால் கே.ஜே.ஜேசுதாஸ் அஞ்சலி!

சென்னை: புகழ் பெற்ற செம்பை வைத்தியநாத பாகவதரின் பிறந்த நாளான இன்று, கர்நாடக இசை கலைஞர் கே.ஜே.ஜேசுதாஸ் உள்ளிட்ட பிரதான சீடர்கள், இசை நிகழ்ச்சி மூலம், குரு அர்ப்பணம் செய்கின்றனர்.கேரள மாநிலம், பாலக்காடு அருகே செம்பையில், 1895, செப்டம்பர், முதல் தேதியில், அனந்த பாகவதர், பார்வதி அம்மாளுக்கு மகனாக பிறந்தவர், செம்பை வைத்தியநாத பாகவதர். இவரின் முன்னோர் அனைவரும், கர்நாடக இசையில், புகழ் பெற்றவர்கள்.இவரின் முப்பாட்டனார், சுப்பையர், "சக்ரதானம் என்ற அரிதான தாளக்கட்டில் பாடியதால், "சக்ரதான சுப்பையர் என அழைக்கப்பட்டார். செம்பை வைத்தியநாத பாகவதர், சிறு வயதில் இருந்தே கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றார்.தன் குரல் வளத்தால், கேட்போரின் உள்ளம் உருக வைத்தார். அதனால், கர்நாடக இசை உலகில், புகழ் பெற்றார். அவரின் பிறந்தநாள், கர்நாடக இசை உலகில், முக்கிய நாளாக கருதப்படுகிறது.அவரின் நினைவை போற்றும் வண்ணம், கர்நாடக இசை கலைஞர், கே.ஜே.ஜேசுதாசின், திருவனந்தபுரம் தரங்கிணிசரி இசைப் பள்ளி, சென்னை, தி.நகரில் உள்ள, கிருஷ்ண கான சபாவில், இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறது. செம்பை வைத்திய நாத பாகவதரின் பிறந்தநாளை முன்னிட்டு, கர்நாடக இசைக் கலைஞர், கே.ஜே.ஜேசுதாஸ், இன்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !