வைத்திக்குப்பத்தில் உறியடி உற்சவம்
ADDED :4468 days ago
புதுச்சேரி: வைத்திக்குப்பம் வேங்கடா ஜலபதி பஜனைக் கூடத் தில், உறியடி உற்சவம் நடந்தது. வைத்திக்குப்பம் வேங்கடா ஜலபதி பஜனைக் கூடம், ராதா ருக்மணி சமேத பக்தவச்சல பாண்டுரங்கன் கோவில் 50ம் ஆண்டு பொன் விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சுதர்சன ஹோமம் நடந்தது இரவு 7:00 மணியளவில் உறியடி உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு சுவாமி ஊர்வலம் நடந்தது. நேற்று (1ம் தேதி) சுவாமி பரனூருக்கு எழுந்தருளினார். ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.