உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓணம் பண்டிகைக்காக பல வண்ணங்களில் மலர்கள்: நிலக்கோட்டையில் தயார்!

ஓணம் பண்டிகைக்காக பல வண்ணங்களில் மலர்கள்: நிலக்கோட்டையில் தயார்!

நிலக்கோட்டை: நிலக்கோட்டை தாலுகாவில் ஓணம் பண்டிகைக்காக பல வண்ண மலர்கள் விளைவிக்கப்படுகின்றன. திண்டுக்கல், நிலக்கோட்டை தாலுகா, மதுரைக்கு அடுத்த படியாக பூ விளைச்சலுக்கு ஏற்ற இடமாக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் பூக்கள், நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் விரைவில் வாடாத குணம் கொண்டது. இதன் அரிய குணத்தால் நிலக்கோட்டை பூக்கள், மாநிலத்தில் பல பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் செப்.16ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, இங்கு பல வண்ணங்களில் பூக்கள் விளைவிக்கப்படுகின்றன. வைகாசி, ஆனி மாதங்களில் மலர் செடிகள் பதியமிடப்பட்டு ஆவணியில் பறிக்கப்படுகின்றன. மல்லியம்பட்டி விவசாயி கோவிந்தன் கூறுகையில்,""-ஆண்டு தோறும் ஓணத்திற்காக சம்பங்கி, வாடாமல்லிகை, செண்டு, செவ்வந்தி, மரிக்கொழுந்து ஆகிய பூக்களை நேரடியாக கேரளாவிற்கு அனுப்புகிறோம், என்றார்.விலை விபரம்(ரூபாய் ஒரு கிலோ),""கனகாம்பரம்-400, மல்லி-260, சம்பங்கி-220, வாடாமல்லிகை, செண்டு, மரிக்கொழுந்து-30,40.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !