உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி விழா

உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலன் சன்னதியில் கிருஷ்ணஜெயந்தி மகோற்சவ விழாநடந்தது. நேற்று முன்தினம் இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று மதியம் அலங்கார திருமஞ்சனம், சேவை சாற்றுமறை, மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !