உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்­ணாடி அறையில் வீர­ரா­கவர் பக்­தர்­க­ளுக்கு தரி­சனம்!

கண்­ணாடி அறையில் வீர­ரா­கவர் பக்­தர்­க­ளுக்கு தரி­சனம்!

திரு­வள்ளூர்: திரு­வள்ளூர் வீர­ரா­கவர் கோவிலில், நேற்று, அமா­வா­சையை முன்­னிட்டு, உற்­சவர் வீர­ரா­கவர் கண்­ணாடி அறையில் எழுந்­த­ருளி பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லித்தார். திரு­வள்ளூர் வீர­ரா­கவ பெருமாள் கோவில், அகோ­பி­ல­மடம் ஆதீன பரம்­பரை ஜீயர் கண்­கா­ணிப்பில் பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது. அமா­வா­சை­யினால் பெருமை பெற்று விளங்­கு­பவர், வைத்­திய வீர­ரா­கவப் பெருமாள். நேற்று, ஆவணி மாத அமா­வாசை என்­பதால், ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்கள் திரு­வள்­ளூ­ருக்கு வந்து, கோவில் சுற்­றுப்­புற பகு­தியில் தங்கி, காலையில் கோவில் குளத்தில் புனித நீராடி, நீண்ட வரி­சையில் காத்­தி­ருந்து சுவா­மியை வழி­பட்­டனர். அதி­காலை 5:00 மணி முதல், மதியம், 12:30 மணி வரை­யிலும், மதியம் 1:30 மணி முதல், இரவு, 8:00 மணி வரை­யிலும் பக்­தர்கள் வரி­சையில் நின்று மூல­வரை தரி­சித்­தனர். கோவிலின் முன் பகு­தியில் கண்­ணாடி அறையில், ஸ்ரீதேவி, பூதேவி உட­னான உற்­சவர் வீர­ரா­கவர் எழுந்­த­ருளி, பக்­தர்­க­ளுக்கு அருள் பாலித்தார். மாலை, 5:30 மணிக்கு மாட­வீ­தி­களில் உற்­சவர் புறப்­பாடு நடை­பெற்­றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !