செல்லாண்டியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை கோலாகலம்
வேலாயுதம்பாளையம்: காட்டம்பட்டி செல்லாண்டியம்மன், கெடி பெரியசாமி கோவிலில் ஆண்டு விழா லட்சார்ச்னை, நவசண்டியாக பூஜை மற்றும் திருவிளக்கு பூஜைகள் நடந்தது. பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன், கெடி பெரியசாமி கோவிலில், காலை கணபதி வழிபாட்டுடன் லட்சார்ச்னை துவங்கியது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், கலச பூஜையும், மாலை 64 யோகினி மற்றும் 64 பைரவர் பலி பூஜை ஆகியவற்றை தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு அம்மன் திருவீதியுலா, ஊஞ்சல் உற்சவம், வாணவேடிக்கையும் ஆகியவை நடந்தது. தொடர்ந்து, நவ சண்டியாக பூஜையும் அதை தொடர்ந்து நவகிரஹ ஹோமம், சுவாசினி பூஜை, கோ பூஜை, கடம் புறப்பாடு, செல்லாண்டியம்மனுக்கு கலசாபிஷேக பூஜை, தீபாராதனை ஆகியவையும் நடந்தது. இதில், கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடிப்பாட்டினர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பறை அறங்காவலர் சின்னுசாமி மற்றும் திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.