மேல்களவாய் கோவில் கும்பாபிஷேகம்
செஞ்சி:செஞ்சி அருகே உள்ள மேல்களவாய் கிராமத்தில் விநாயகர், பாப்பார மாரியம்மன், முருகன், தாட்சாயிணி, நாராயணி, துர்க்கை கோவில்களின் மகா கும்பாபிஷேகம் செப் 13 நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 6ம் தேதி குருபூஜை, விநாயகர் பூஜை, சக்தி பூஜை நடந்தது. 9ம் தேதி கோபுர கலசம் மற்றும் விக்ரகங்கள் கரிக்கோல ஊர்வலம் நடந்தது. 10ம் தேதி காலை 10.30 மணிக்கு முதற்கால வேள்வியும், இரவு இரண்டாம் கால வேள்வியும், அம்மனுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடந்தது. செப் 12 காலை மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நிறைவடைந்து காலை 9.50 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க இளைஞர் அணி தலைவர் செந்தில்குமார் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் செய்தனர். எம்.எல்.ஏ., கணேஷ்குமார், முன்னாள் எம்.எல். ஏ., நடராஜன் மற்றும் விழா குழுவினர் பங்கேற்றனர்.