உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலப்பர்சாமி கோவிலில் 108 சங்காபிஷேக பூஜைகள்

வேலப்பர்சாமி கோவிலில் 108 சங்காபிஷேக பூஜைகள்

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை ஏரிக்கரையில் அமைந்துள்ள வேலப்பர்சாமி கோவிலில் 108 சங்காபிஷேக பூஜைகள் நடந்தன.உளுந்தூர்பேட்டை ஏரிக்கரையில் அமைந்துள்ள வேலப்பர்சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 28ம் தேதி நடந்தது. பின், 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடந்தது. இறுதி நாளான செப் 13 மதியம் 1 மணிக்கு யாக சாலை பூஜைகள் மற்றும் 108 சங்காபிஷேக பூஜைகள் நடந்தது. மாவட்ட தமிழ்நெடி சைவ முறை சிவனடியார் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சண்முகம், தண்டபாணி, பழனிவேல், சின்னதம்பி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !