உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மராஜ சுவாமி கோவிலில் 16ம் தேதி மகா கும்பாபிஷேகம்

தர்மராஜ சுவாமி கோவிலில் 16ம் தேதி மகா கும்பாபிஷேகம்

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் விநாயகர், திரவுபதியம்மன் சமேத தர்மராஜ சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜூர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 16ம் தேதி நடக்கிறது.அதனையொட்டி செப் 14ம் தேதி மாலை 5 மணிக்கு யாக சாலை பிரவேசம், அக்னி பிரதிஷ் டை, கடஸ்தாபனம், முதல் கால ஹோமமும், 15ம் தேதி காலை 8 மணிக்கு நித்ய ஹோமம், இரண்டாம் கால மகா பூர்ணாஹூதி, மாலை 5 மணிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்), பிரதான ஹோமம் நடக்கிறது. 16ம் தேதி காலை 6 மணிக்கு சுப்ரபாதம், நித்யாராதனம், கும்பாராதனம், ததுக்த ஹோமம் நடக்கிறது. 9.30 மணிக்கு யாக்ராதானம் கும்பம் புறப்பட்டு விநாயகர், திரவுபதியம்மன் சமேத தர்மராஜ சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜூர்ணோத் தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் திருவீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !