கோலம் போட நிபந்தனை!
ADDED :4794 days ago
விசேஷ நாட்களில் வாசலில் கடவுளின் திருவுருவத்தை கோலமாக சிலர் வரைகின்றனர். இது சரியானதல்ல. கடவுளின் உருவத்தை கோலமிடும்போது, தெருவில் செல்பவர்கள் செருப்புடன் அதை மிதித்துச் செல்வர். புனிதமான கடவுளின் திருஉருவத்தை வரைய விரும்பினால், பூஜையறையில் விளக்கின் முன்பு சிறிதாக வரைந்து கொள்ளுங்கள். வாசலில் வழக்கமான புள்ளி, ரங்கோலி கோலங்களை வரைந்தாலே போதும்.