நவபாஷாண சிலைகளில் அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தத்தை சாப்பிடலாமா?
ADDED :4794 days ago
நவபாஷாணம் என்பது ஒன்பது மூலிகை கொண்டது. இந்த சிலைகளில் அபிஷேகம் செய்வதே அதன் தெய்வீகம், மருத்துவப்பயன் கருதி தான். சித்த வைத்திய நிபுணர்களான சித்தர்களே இந்த சிலைகளைச் செய்து ஆன்மிகத்தோடு மருத்துவத்தையும் புகுத்தி நன்மை செய்தனர். போகரால் செய்யப்பட்ட முருகன் சிலையே பழநியில் உள்ளது. அபிஷேக பஞ்சாமிர்தத்தை சாப்பிட்டால் நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.