மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
4392 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
4392 days ago
ஆரணி: புரட்டாசி மாதத்தை ஒட்டி, ஆரணி ஆதிகேசவ பெருமாள் கோவிலில், பவித்ர உற்சவ விழா நடந்தது. பெரியபாளையம் அடுத்த, ஆரணி பேரூராட்சியில் உள்ளது ஆதிலட்சுமி உடனுறை ஆதிகேசவ பெருமாள் கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம், பவித்ர உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம், இக்கோவிலில், பவித்ர உற்சவ விழா நடந்தது. இதை ஒட்டி, சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடத்தன. இரவு, யாத்ரா தானம், கும்ப புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகளுடன், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஆரணியில் உள்ள வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, லட்சார்ச்சனை விழா நடந்தது. இதில், ஆரணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
4392 days ago
4392 days ago