மழை வேண்டி கஞ்சிக்கலய ஊர்வலம்
ADDED :4426 days ago
உடுமலையில், ஆதிபராசக்தி வழிபாட்டு மகளிர் மன்றம் சார்பில், மழை வேண்டி கஞ்சி கலய ஊர்வலம் மற்றும் வார்ப்பு விழா நடந்தது. விழாவிற்கு, மகளிர் வழிபாட்டு மன்ற தலைவர் ஜோதி முன்னிலை வகித்தார். சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வார்ப்பு நிகழ்ச்சியையும், கேபிள் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் கஞ்சி கலய ஊர்வலத்தையும் துவக்கி வைத்தனர். காளியம்மன் கோவிலில் துவங்கிய ஊர்வலம் முக்கிய
வீதிகளின் வழியாக சென்று, மதுரை வீரன் முனியப்பசாமி கோவிலை அடைந்தது. தொடர்ந்து, நகராட்சித்தலைவர் ஷோபனா, துணைத்தலைவர்
கண்ணாயிரம் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். மழை வேண்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.