மதுரையில் ஓணம் கொண்டாட்டம்
ADDED :4391 days ago
மதுரை : மதுரையில், மலையாளி சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. செயலாளர் ஜெயநாராயணன் வரவேற்றார். தலைவர் கே.ஆர். சங்கரன் தலைமை வகித்தார். கலெக்டர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். ராதா தியாகராஜனின் உருவப்படத்தை, ஆரிய வைத்திய நிலைய நிறுவனர் பி.வி.ராகவவாரியார் திறந்து வைத்தார். சி.டி.எம்.ஏ., செயலாளர் பி.கே.ராமசந்திரன், வி.பரமேஸ்வரன், நெல்லை சமாஜ தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். பொருளாளர் கே.ராமதாஸ் நன்றி கூறினார்.