உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் திருவுலா பக்தர்கள் வருகை குறைவு!

திருமலையில் திருவுலா பக்தர்கள் வருகை குறைவு!

திருப்பதி: திருமலை ஏழுமலையான் பிரமோற்சவத்தில், இரண்டாம் நாளான நேற்று காலை, சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வந்தார். திருமலையில் பிரமோற்சவ உற்சவம் துவங்கிய நிலையில், முதல் நாளான, நேற்று முன்தினம் இரவு, பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வலம் வந்தார். இரண்டாம் நாளான நேற்று காலை, சின்னசேஷ வாகனத்தில், வேணுகோபால சுவாமி அவதாரத்திலும், இரவு அன்னப்பறவை வாகனத்தில், சரஸ்வதி தேவி அலங் காரத்திலும் மாட வீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருமலையில், இம்முறை பிரமோற்சவத்தில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இல்லை. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும், ஆந்திராவில், நடந்து வரும் போராட்டங்களாலும், பக்தர்கள் வருகை மிக குறைவாக உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !