உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு தள்ளுபடி!

திருப்பதி வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு தள்ளுபடி!

சென்னை: திருப்பதி வரும் பக்தர்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானசேகர், தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் இருந்து, திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். தற்போது, தெலுங்கானா பிரச்னையால், ஆந்திராவில், தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், திருப்பதிக்கு பக்தர்கள் செல்வதில் பிரச்னை உள்ளது. அங்கு செல்லும் பக்தர்களின் உயிருக்கும், உடமைக்கும், போலீஸ் பாதுகாப்பு வழங்க, ஆந்திர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. "நடவடிக்கைக்கான காரணம், இங்கு எழவில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !