சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம்
ADDED :4416 days ago
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், 10 நாட்கள் நவராத்திரி உற்சவத்தில், துவக்க நாளான, நேற்று முன்தினம், உற்சவர், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளியில் அமைந்தள்ள பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், சிவபெருமான் உருவ ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது விசேஷம். ஒவ்வொரு ஆண்டும், இக்கோவிலில், நவராத்திரி உற்சவம், 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டு, கடந்த, 5ம் தேதி துவங்கியது. முதல் நாள், இரவு, உற்சவர், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், லலிதாசகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது. இரண்டாம் நாளான, நேற்று, காமாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, அன்னபூரணி அலங்காரம் செய்யப்படுகிறது.